வாசகர்கள் கருத்துகள் (1)
கமலஹாசன் நண்பரா ? ஒன்றுமே புரியவில்லை .
தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தனுஷின் 'கொடி' படம் மூலம் தமிழுக்கு வந்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' மற்றும் 'லாக்டவுன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது ஒரு தெலுங்கு படத்திலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அனுபமா தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், ‛‛சில சமயங்களில், நிம்மதியை அடைய பயனற்ற பாதைகளைக் கைவிட வேண்டியிருக்கும். இன்று, அந்த நிம்மதி என்னைத் தேடி வந்தது. இன்றிலிருந்து, என் குரலை நானே தேர்ந்தெடுக்கிறேன். என் வாழ்க்கையை நானே தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை; இனி பயமும் இல்லை. நான் மீண்டும் என்னையே கண்டடைகிறேன்.
ஒரு காலத்தில் என்னுடையது என்பதை மறந்திருந்த அந்த வாழ்க்கையை மீண்டும் நேசிக்கத் தொடங்குகிறேன். நீண்ட நாட்களாக நான் சொல்ல நினைத்த ஒரு விஷயம் இருக்கிறது. நீண்ட காலமாகச் சொல்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரு விஷயம். எனக்குத் துணையாக நின்றதற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், என் வாழ்க்கையை அன்பால் நிரப்பியதற்கும் நன்றி. இதை நான் முன்பே போதுமான அளவு சொல்லியிருக்காவிட்டாலும், என் மனதில் அந்த உணர்வு எப்போதும் இருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
எனக்கு மிகவும் தேவைப்பட்ட தருணங்களில் உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பிரார்த்தனையும், ஒவ்வொரு அன்பான செயலும் என்னை வந்தடைந்தன. என்னை மீண்டும் என்னிடமே அழைத்து வந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. மனம் ஆறுவதைக் கொண்டாடுவோம். சுதந்திரத்தைக் கொண்டாடுவோம். என்னையே தேர்ந்தெடுப்பதைக் கொண்டாடுவோம். இறுதியாக, முழுமையாக, எதற்காகவும் தயங்காமல் எனக்கே உரியதாக அமைந்த வாழ்க்கையைக் கொண்டாடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவோடு அவர் சுதந்திரமாகவும், ஜாலியாகவும், மகிழ்ச்சியாக இருப்பது மாதிரியான வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அனுபமா இதுவரை யாருடைய கட்டுப்பாட்டிலோ இருந்துள்ளார் என சந்தகேம் எழுகிறது. குடும்பமா? காதலரா? அல்லது வேறு யாராவதா? என்பதை பின்னாளில் அவர் சொல்லக்கூடும்.
கமலஹாசன் நண்பரா ? ஒன்றுமே புரியவில்லை .