உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமரன் படத்தில் மிஸ்சிங் ராமாயணாவில் கிடைக்குமா?

அமரன் படத்தில் மிஸ்சிங் ராமாயணாவில் கிடைக்குமா?

72 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு தேசிய விருது கண்டிப்பாக கிடைக்கும் என பல மாதங்களாக பேச்சு இருந்தது. மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி இந்துவாக தத்ரூபமாக எமோஷன் கலந்து சிறப்பாக நடித்திருந்தார் சாய் பல்லவி. ஆனால் 370 படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு தேசிய விருது கிடைத்தது. சாய் பல்லவி மற்றும் அவர் தரப்பு அவர் ரசிகர்கள் அப்செட்.

இந்நிலையில் ராமாயணா படத்தில் சீதையாக நடித்து வரும் சாய் பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று இப்பொழுது ஒரு தரப்பு பேச ஆரம்பித்துள்ளது. 4000 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமாக தயாராகி வரும் ராமாயண படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சாய்பல்லவி நடிப்பும் அவர் கெட்டப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. சீதையை வணங்கி விட்டு அவர் அருளால் நடித்தேன் என சாய்பல்லவி கூறியுள்ளார்.

அமரன் படத்தில் விட்டதை ராமாயணா படத்தில் சாய் பல்லவி பிடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் அமரன் படத்தில் சிவகார்த்திகேயனும் தேசிய விருதை தவற விட்டுள்ளார் அவரும் அடுத்த படங்களில் எப்படியாவது தேசிய விருதை பெற வேண்டும் என முயற்சிக்கிறாராம்.

அமரன் படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்தியாவில் சிறந்த இயக்குனர் இருந்து வாங்கியுள்ளார். அது படக்குழுவுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது. அதேபோல் அமரன் எடிட்டர் கலைவாணன் தேசிய விருது பெற்றுள்ளார். இருவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் மற்றும் ஹீரோ சிவகார்த்திகேயன் ஆகியோர் விரைவில் பார்ட்டி வைத்து வாழ்த்து தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !