உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆகஸ்ட் மாதம் தொடங்குமா அஜித் படம்?

ஆகஸ்ட் மாதம் தொடங்குமா அஜித் படம்?

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படம் பண்ணாமல் கார் ரேசில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித். ஜனவரி மாதம் தொடங்கும், பிப்ரவரி மாதம் தொடங்கும் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அப்டேட் மட்டும் கொடுத்து வந்தார். ஆனால் இதுவரை அஜித் படம் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் தென்னிந்திய எழுத்தாளர் சங்க தேர்தலில் ஓட்டு போட வந்த ஆதிக் ரவிச்சந்திரன், ‛ஆகஸ்ட் மாதம் அஜித் படம் தொடங்கும். ஸ்கிரிப்ட் ரெடி, அஜித் தரப்பு மற்றும் பட நிறுவனம் முறைப்படி அறிவிப்பு வெளியிடும்' என்று பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த முறையாவது அவர் சொன்னபடி ஆகஸ்ட் மாதம் படம் தொடங்குமா என கேள்வி எழுந்துள்ளது. பட நிறுவனமே அறிவிக்கும் என ஆதிக் கூறியுள்ளதால், அந்த படத்தை அஜித் தயாரிக்கவில்லை என தெரிய வருகிறது. அப்படியானால் அதை தயாரிப்பது தெலுங்கு நிறுவனமா? ரோமியோ பிக்சர்ஸ் ராகுலாம் அல்லது வேறு யாருமா? அஜித் தனது சம்பளத்தை குறைத்து விட்டாரா? என்றும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

எது எப்படியோ ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டாவது அஜித் படம் வெளியாக வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்த படத்தில் கயாடு லோகர் நடிக்க உள்ளதாக சமீப காலமாக செய்தி பரவுவதும் குறிப்பிடத்தக்கது. அஜித் படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக் ரவிச்சந்திரனும் வேறு படம் பண்ணாமல் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !