உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செக் மோசடி வழக்கு : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை

செக் மோசடி வழக்கு : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை

விமல் தயாரித்து நடித்த 'மன்னர் வகையறா' படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இந்த படத்தை தயாரிக்க கோபி என்பவரிடம் விமல் 4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் காசோலை வழங்கி உள்ளார். அந்த காசோலை வங்கயில் பணம் இன்றி திரும்பி வந்தது. அதன் பின்னரும் விமல் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் கோபி செக்மோசடி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரித்த நீதிபதி ஆர்த்தி இன்று தீர்ப்பளித்தார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், நடிகர் விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேல்முறையீடு செய்ய வசதியாக விமலுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !