உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் கத்ரீனா கைப்பின் ரசிகர் பக்கம் மூடல்

மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் கத்ரீனா கைப்பின் ரசிகர் பக்கம் மூடல்


நீட் தேர்வு கேள்வித்தாள்கள் லீக்கான விவகாரத்தை தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கூறி காக்ரோச் ஜனதா பார்ட்டி என்கிற அமைப்பு டில்லியில் தற்போது போராட்டம் நடத்தி வருகிறது. இதில் மாணவர்களும் தற்போது கலந்து கொண்டு வருகின்றனர். அதே சமயம், அவர்களை போலீசார் தடியடி நடத்தியும் கைது செய்தும் கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அதே சமயம், நடிகை கத்ரீனா கைப் இந்த விவகாரம் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்.

இவரது பெயரில் 'கத்ரீனா கைப் பேன் பேஜ்' என்கிற கணக்கை ரசிகர்கள் நிர்வகித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 70 ஆயிரத்திற்கும் மேல் பின் தொடர்பவர்கள் இதில் இருக்கின்றனர். மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் கத்ரீனா கைப் அமைதியாக இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த அவர்கள், இந்த கணக்கை மூடுவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், உங்களுக்கு தைரியம் இல்லை என்கிற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !