மீண்டும் இணையும் ‛விடுதலை' கூட்டணி
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சிம்பு நடிப்பில் ‛அரசன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிம்புவுடன் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, கிஷோர் குமார் ஆகியோர் நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்து விரைவில் ஒரு புதிய படத்தை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கனவே ‛விடுதலை' மற்றும் ‛விடுதலை-2' ஆகிய படங்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படம் ஒரு கிராமத்து குடும்பக் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வெற்றிமாறன் கைவசம் ஏற்கனவே தனுஷூடன் இணையவுள்ள ‛தமிழ் முருகன், வடசென்னை -2' படங்கள் உள்ளன. இந்த புதிய தகவல் உண்மை என்றால், தனுஷ் நடிக்கும் வட சென்னை-2வுக்கு பிறகு விஜய்சேதுபதி- வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணையும் என்பது தெரியவந்துள்ளது.