உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்றாவது முறையாக ஜோடி சேரும் தினேஷ், கயல் ஆனந்தி!

மூன்றாவது முறையாக ஜோடி சேரும் தினேஷ், கயல் ஆனந்தி!


நடிகர் ‛அட்டகத்தி' தினேஷ் தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'லப்பர் பந்து' படத்தின் வெற்றியை தக்கவைத்து கொள்வார் என பார்த்தால் அதையும் கோட்டை விட்டார் தினேஷ்.

தற்போது புதுமுக இயக்குனர் மதி என்பவரின் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி இணைந்து ‛விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' ஆகிய படங்களில் நடித்திருந்தனர். இப்போது மூன்றாவது முறையாக இந்த ஜோடி இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !