சீக்கிரம் 'இந்தியன்' ஆக மாறுவேன் : அகில் நாகார்ஜூனா
தெலுங்குத் திரையுலகத்தின் அந்தக் கால காதல் ஜோடி நாகார்ஜூனா - அமலா. நாகார்ஜூனா தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். அமலா, முன்னணி கதாநாயகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என 80, 90களின் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.
நாகார்ஜூனா, அமலா இருவரும் ஒன்றாக நடித்த போது காதல் வயப்பட்டார்கள். அதனால், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து பின் அமலாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஒரே மகன் அகில் அமெரிக்காவில் பிறந்தவர். தெலுங்கில் நடிகராக இப்போதுதான் முதல் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'லெனின்' படம் 90 கோடி வசூலைக் கடந்து 3வது வாரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அகில், விரைவில் இந்திய குடியுரிமையை பெறப் போவதாகவும், அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரையில் அமெரிக்க குடியுரிமையை வைத்திருந்தாலும் தான் ஒரு இந்தியர் என்பதில் எந்தக் குறைவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.