பிளாஷ்பேக் : 'நாகநந்தினி'யில் 4 ஹீரோயின்கள்
ADDED : 14 hours ago
பாம்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படங்களுக்கு எப்போதுமே ஒரு மினிமம் கேரன்டி உண்டு. 'நாகினி' என்ற வெப் தொடர் பல சீசன்களை கடந்து வெற்றி பெற்றது. 'நீயா, பாலநாகம்மா' போன்ற படங்கள் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'நாகபந்தம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவற்றுக்கு முன்னோடியாக 1961ம் ஆண்டு வெளிவந்த படம் 'நாகநந்தினி'.
இந்தப் படத்தை ஜி ஆர் நாதன் இயக்கியிருந்தார். கே.பாலாஜி நாயகனாகவும் பி.எஸ். வீரப்பா எம். என் நம்பியார் வில்லன்களாகவும் நடித்திருந்தனர். அஞ்சலிதேவி தேவிகா, சந்தியா, ராஜகுமாரி என நான்கு ஹீரோயின்கள் நடித்து இருந்தனர். ஆர் சுதர்சன் இசையமைத்திருந்தார். நாயகிகளின் கவர்ச்சி நடனமும் போட்டி நடனங்களும் படத்தை வெற்றி பெற வைத்தது.