உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராம் சரணுக்கு கோவையில் ஆபரேஷன்

ராம் சரணுக்கு கோவையில் ஆபரேஷன்


தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகரான ராம்சரண் நடித்து சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற படம் 'பெத்தி'. இந்தப் படத்தில் ராம்சரண் நடித்த ஆக்சன் காட்சிகள் பரவலாக பேசப்பட்டது.

இந்த படத்தின் சண்டைக்காட்சியில் நடித்தபோது, அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தாலும் முழங்கையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் அதன் பிறகு ஒரு மாத காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்னதாக ஆபரேஷனை செய்து கொள்ள முடிவு செய்த ராம்சரண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று அவருக்கு ஆபரேஷன் நடைபெற உள்ளது. அவருடன் தந்தை சிரஞ்சீவி, மனைவி உபாசனா மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். சிகிச்சைமுடிந்து சில நாட்கள் மருத்துவமனையிலும் பின்னர் வீட்டிலும் ஓய்வெடுத்த பின்பு, அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-07-27 20:59:47

ஊரு தமிழ்நாடு தான் ஆனால் டாக்டர் தெலுங்கு