உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோவையில் பாடல் வெளியீட்டு விழா: சூர்யா பிளான் என்ன?

கோவையில் பாடல் வெளியீட்டு விழா: சூர்யா பிளான் என்ன?


வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிக்கும் 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' படம் ஆகஸ்ட் 14ல் ரிலீஸ். முன்னதாக இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோவையில் ஆகஸ்ட் 2ல் நடக்க உள்ளது. இதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பொதுவாக பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கும். சூர்யா பட விழா கோவையில் நடக்க காரணம் என்ன என்று விசாரித்தால், சூர்யா நடித்த 'கருப்பு' பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. படம் ஹிட்.

அந்த செண்டிமெண்டில் கோவையில் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. தவிர பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுக்கு கருப்பு வெற்றி படமாக அமைந்தது. அதை தனது சொந்த ஊரான கோவையில் சொந்தங்களுடன் கொண்டாட விரும்புகிறார். சூர்யா அதனால் தனது அடுத்த படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பாடல் வெளியீட்டு விழாவையும் கோவையில் வைத்துள்ளார். கதைக்கும் கோவைக்கும் சம்பந்தம் இருப்பதாலும் இந்த விழா அங்கே நடப்பதாக தகவல். கோவையில் பாடல்களை லைவ் ஆக பாட இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !