உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கன்னடத்தில் மகளை அறிமுகப்படுத்தும் ஊர்வசி: 8 வருடங்களுக்குப் பிறகு தானும் ரீ என்ட்ரி

கன்னடத்தில் மகளை அறிமுகப்படுத்தும் ஊர்வசி: 8 வருடங்களுக்குப் பிறகு தானும் ரீ என்ட்ரி

நடிகை ஊர்வசி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து பிரபலமானவர். சமீப வருடங்களாகத் தமிழ் மற்றும் மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது 8 வருடங்கள் கழித்து கன்னட திரையுலகில் 'புல்லி' (Bully) என்கிற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் ஊர்வசி.

ஆச்சரியமாக அவரது மகள் தேஜலட்சுமி இப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கதாநாயகனாக புவன் பொன்னண்ணா என்பவர் நடிக்கிறார். தாய் - மகன் உறவை மையப்படுத்தி டார்க் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது பெங்களூரில் நடந்து முடிந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !