உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் சல்மான் பட டிரைலரை வெளியிட்டு ஜூனியர் என்.டி.ஆர் வாழ்த்து

துல்கர் சல்மான் பட டிரைலரை வெளியிட்டு ஜூனியர் என்.டி.ஆர் வாழ்த்து

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வரும் துல்கர் சல்மான் நடிப்பில் சிறிய இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் உருவாகி வரும் படம் 'அயம் கேம்' (I Am Game). கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆர்.டி.எக்ஸ்' படத்தின் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். சூதாட்ட பின்னணியில், அதேசமயம் 'ஆர்.டி.எக்ஸ்' படம் போன்றே ஒரு பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட படமாக இது உருவாகியுள்ளது. கதாநாயகியாக கயாடு லோகர் நடிக்கிறார். இதில் துல்கர் சல்மான் அதிர்ஷ்டத்தை நம்பாமல் கணிப்புகள் மற்றும் யுக்திகளை நம்பும் ஒரு வித்தியாசமான சூதாட்டக்காரர் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதன் தெலுங்கு பதிப்பின் டிரைலரை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், டிரைலரின் அதிரடியான வைப் மிகவும் பிடித்திருக்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக இருக்கும் வகையிலும் உள்ளது. எனது சகோதரர் துல்கர் சல்மான் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான ஒன்றை தந்துள்ளார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பந்தயம் மிகப்பெரிய வெற்றியை பெறட்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !