உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாப்பிடும்போது சல்மான் கான் தொடர்ந்து கடைபிடித்து வரும் வினோத பழக்கம்

சாப்பிடும்போது சல்மான் கான் தொடர்ந்து கடைபிடித்து வரும் வினோத பழக்கம்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது சாப்பாட்டு நேரத்தின் போது ஒரு வித்தியாசமான பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் என்று, சமீபத்திய பேட்டியில் திரைப்பட தயாரிப்பாளர் சைலேந்திர சிங் என்பவர் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார். அதாவது, சல்மான் கான், தான் எப்போது சாப்பிட அமர்ந்தாலும், தனக்கு எதிரில் உள்ள கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டே சாப்பிடும் வழக்கத்தை வைத்திருக்கிறாராம். அந்த சமயத்தில் அவர் அருகில் யாராவது அமர்ந்திருந்தார்கள் என்றாலும் கூட, அவர்களையும் கண்ணாடியிலேயே பார்த்தபடி தான் பேசி பதிலளிப்பாராம்.

அப்படி ஒரு முறை தயாரிப்பாளர் சைலேந்திர சிங் அவரை சந்திக்கச் சென்று பேசிக் கொண்டிருந்தபோது, சல்மான் கான் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென மருத்துவ உபகரணங்களுடன் உள்ளே நுழைந்த ஒரு நபர், கையுறைகளை அணிந்து கொண்டு ஒரு இன்ஜெக்ஷனை எடுத்து சல்மான் கானின் தலைமுடி பகுதியில் அதை செலுத்தத் தொடங்கியுள்ளார். இது தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி அளித்தாலும், சல்மான் கான் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் சாப்பிட்டபடியே இருந்தாராம்.

அதன் பிறகு அந்த தயாரிப்பாளர் இது என்னவென்று கேட்க, ஒரு ஸ்டாராக மாறுவதற்கு நாம் சில விலையை கொடுக்க வேண்டும் ப்ரோ என்று கூறினாராம். பின்னர்தான் அது தலைமுடி வளர்ச்சிக்காக செய்யப்படும் பி.ஆர்.பி (PRP) சிகிச்சை என்பது தனக்கு தெரியவந்ததாகத் தயாரிப்பாளர் சைலேந்திர சிங் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !