உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷரிதாவிற்கு கை கொடுப்பாரா 'லெனின் பாண்டியன்'

ஷரிதாவிற்கு கை கொடுப்பாரா 'லெனின் பாண்டியன்'

நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் ஷரிதா ராவ். 'கும்கி 2' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கொம்பன். டிஎன்2026, சிங்கா, ஆற்றல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தற்போது அவர் நடித்து வரும் படம் 'லெனின் பாண்டியன்'. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், டி.டி.பாலச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள படம். கங்கை அமரன், ரோஜா ஜோடியுடன் தர்ஷன் கணேசன், 'ஆடுகளம்' நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, சுப்பு பஞ்சு நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

விவசாயிக்கு பாதுகாப்பு, காவல்துறையின் அதிகார அத்துமீறல், மணல் மாபியா உள்பட பல்வேறு விஷயங்களை பேசும் படமாக உருவாகி வருகிறது. வருகிற செப்டம்பர் 25ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் தர்ஷன் கணேசன் ஜோடியாக ஷரிதா நடிக்கிறார். இந்த படத்தில்தான் ஷரிதா ஒரு முழுநீள கேரக்டரில் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் மூலம் தனக்கான இடத்தை பிடித்து விட முடியும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ஷரிதா ராவ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !