உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிக்கொண்டே இருந்தால் எப்போது ரசிப்பது ? டாப்ஸியின் வருத்தம்

ஓடிக்கொண்டே இருந்தால் எப்போது ரசிப்பது ? டாப்ஸியின் வருத்தம்


தமிழில் 'ஆடுகளம், ஆரம்பம், வை ராஜா வை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை டாப்ஸி. தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த அவரது நடிப்பில் கடந்த வருடம் படம் எதுவும் வெளியாகவில்லை. இந்த வருடம் 'அஷ்ஷி' என்கிற ஒரு படம் மட்டும் வெளியாகி இருக்கிறது. படங்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் குறித்து வித்தியாசமான கோணத்தில் மனம் திறந்து பதிலளித்துள்ளார் டாப்ஸி.

எவ்வளவு வெற்றி தான் போதுமானது? இந்த கேள்வியை நான் ஒவ்வொரு நாளும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு ஓடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த பயணத்தை நான் முழுமையாக ரசிக்க தவறிவிட்டேன். மைல்கற்களை தாண்டி செல்வதில் மட்டும் அர்த்தமில்லை; அந்த பயணத்தின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ வேண்டும். என்னுடைய பயணத்தை நான் முழுமையாக ரசிக்கத் தவறிவிட்டேன்.

மற்றவர்களை திருப்திப்படுத்தவோ அல்லது நான்தான் சிறந்த நடிகை என்பதை நிரூபிக்கவோ நான் இந்த ஓட்டத்தில் ஓடவில்லை. லட்சியம் என்பது நம்மை வளர்க்க உதவ வேண்டுமே தவிர நமது மன அமைதியை பறித்து விடக்கூடாது என்று கூறியுள்ளார். இதனாலேயே அவர் தான் ஒப்புக்கொள்ளும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டுள்ளாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !