உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 15 வருடங்களுக்கு பிறகு பிரித்விராஜ் படம் மூலம் நடிகை மோகினி ரீ என்ட்ரி

15 வருடங்களுக்கு பிறகு பிரித்விராஜ் படம் மூலம் நடிகை மோகினி ரீ என்ட்ரி

1991-ல் வெளியான 'ஈரமான ரோஜாவே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. அதனைத் தொடர்ந்து கார்த்திக், சரத்குமார் என அப்போதைய முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், ஒரு கட்டத்தில் 2000-க்கு முன்பாகவே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பெயரளவுக்கு சில படங்களில் நடித்தாலும், 2011-ல் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான 'கலெக்டர்' படத்தை தொடர்ந்து மோகினி எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில், 'புலிமுருகன்' இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகி வரும் 'கலிபா' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் 15 வருடங்களுக்குப் பிறகு நடிப்புக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் மோகினி. இந்த படத்தில் இவர் ஏற்று நடிக்கும் நூர்ஜகான் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஆக-20-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !