‛பியார் பிரேமா கல்யாணம்' டிரைலர் வெளியீடு
பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளன். அடுத்து ஸ்டார் படத்தை இயக்கினார். இப்போது பியார் பிரேமா கல்யாணம் எனும் படத்தை இயக்கி, அதில் அவரே நடித்து, நாயகனாகவும் களமிறங்கி உள்ளார். இவருக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ராதிகா, யோகிபாபு, செந்தில், எம்எஸ் பாஸ்கர், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். இந்தபடம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஆக., 21ல் வெளியாகிறது.