வாசகர்கள் கருத்துகள் (1)
antony Perumbavoor லாலேட்டனின் கார் ஓட்டுனராக இருந்தவர்.
மலையாளத்தில் கடந்த வாரம் மோகன்லாலின் மகள் விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமான ‛தொடக்கம்' திரைப்படம் வெளியானது. 2018 படத்தை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மோகன்லால் மகள் விஸ்மயாவை போல மோகன்லாலின் நண்பரும் ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பாளருமான ஆண்டனி பெரும்பாவூரின் மகன் ஆசிஷ் ஜோ ஆண்டனி இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.
படம் முழுவதும் ரசிகர்களை பதட்டமடைய செய்யும் விதமாக மிரட்டல் நடிப்பை வழங்கியிருந்த இவர், இந்த படத்தில் பேசிய மொத்த வசனம் ஒரு பக்கம் கூட வராது. அந்த அளவுக்கு பார்வையிலும் செய்கையிலும் மட்டுமே தனது நடிப்பை இவர் சிறப்பாக வழங்கியிருந்தார். பிரபல தயாரிப்பாளர் மகன் என்பதால் கதாநாயகனாக தான் களம் இறங்குவேன் என்று இல்லாமல் வில்லனாக அறிமுகமான இவருக்கு தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும்.
antony Perumbavoor லாலேட்டனின் கார் ஓட்டுனராக இருந்தவர்.