உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 5வது முறையாக பெப்சி தலைவராாக ஆர்கே செல்வமணி தேர்வு

5வது முறையாக பெப்சி தலைவராாக ஆர்கே செல்வமணி தேர்வு

பெப்சி தேர்தலில் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். 5வது முறையாக ஆர்கே செல்வமணி தலைவரானார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் எனப்படும் பெப்சியில் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள் உள்பட 23 சங்கங்கள் இணைந்துள்ளன. இந்த அமைப்புக்கான 2026-29ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் பெப்சியின் தலைவராக ஆர்.கே.செல்வமணி ஐந்தாவது முறையாக பதவியேற்றார். பொதுச் செயலராக சுவாமிநாதன், பொருளாளராக செந்தில்குமார், துணைத்தலைவர்களாக அசோக் மேத்தா, மோகனமகேந்திரன் உள்ளிட்ட பலர் பதவியேற்றனர்.

ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் கூறுகையில், ‛‛பெரும் நஷ்டத்தில் இயங்கும் தமிழ் திரைத்துறையை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தி செல்ல தமிழக முதல்வர் விஜய் உதவ வேண்டும். மத்திய அரசு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை போல், தமிழ்நாடு அரசு தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கழகம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !