உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் 300 கோடி வசூலைப் பெறுவாரா சூர்யா?

மீண்டும் 300 கோடி வசூலைப் பெறுவாரா சூர்யா?


தமிழ் சினிமாவிலிருந்து நடிகர் விஜய் விலகிவிட்டதால், அவரது இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி திரையுலகில் எழுந்துள்ளது. இந்த வருடத்தில் முதன் முதலில் 300 கோடி வசூலைப் பெற்ற படமாக சூர்யா நடித்த 'கருப்பு' படம் இருந்தது. அந்த வசூலை விஜய்யின் கடைசி படமாக வெளிவந்த 'ஜனநாயகன்' முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.

இந்த ஆண்டில் சூர்யாவின் அடுத்த படமாக 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' நாளை வெளியாக உள்ளது. இந்தப் படமும் குடும்பத்துடன் பார்க்கும்படியான படமாக இருக்கும் என படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'கருப்பு' படம் போலவே இந்தப் படமும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் நிச்சயம் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் சினிமா ஹீரோக்களைப் பற்றிய டிரோல்கள் நிறையவே குறைந்துவிட்டது. அதனால்தான் இந்த வருடத்தில் சில படங்கள் நல்ல வசூலைப் பெறுவதாகவும் சொல்கிறார்கள். 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திற்கும் அப்படியே நடந்துவிட்டால் அது சிறப்புதான். நாளை என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !