உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் தர்மன் புரொமோவிற்கு கூடுதல் பலம் சேர்த்த அனிருத்தின் இசை

ரஜினியின் தர்மன் புரொமோவிற்கு கூடுதல் பலம் சேர்த்த அனிருத்தின் இசை

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. ரஜினி மருத்துவராக நடிக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதை ஒரு வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.

இந்த வீடியோ வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், படத்தின் மாஸான உலகத்தைப் பற்றிய ஒரு சிறிய பார்வையையும் வழங்கியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசை இந்த புரோமோவிற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இதில் ரஜினிகாந்த் மிகவும் ஸ்டைலிஷான மற்றும் சக்திவாய்ந்த தோற்றத்தில் தோன்றுகிறார். இந்த வீடியோ புரோமோ ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த தர்மன் படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !