முத்தப் புகைப்படங்கள் வெளியாகி பிரிந்த காதல் ஜோடிகள்
தமிழ் சினிமாவில் பல காதல் கதைகள் உண்டு. அதில் சில கதைகள், நிஜத்திற்கு மாறி கல்யாணத்தில் முடிந்துள்ளன. அப்படி முடிந்த சிலவும் பின்னர் விவாகரத்து பெற்றது தனிக் கதை. சில காதல்கள் கிசுகிசுக்களாகவே போய்விடும்.
தமிழ் சினிமாவில் கடந்த வருடங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய காதல் என்றால் அது சிலம்பரசன், நயன்தாரா காதல் தான். இருவரது முத்தப் புகைப்படங்கள் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்தக் காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சீக்கிரத்திலேயே பிரிவை சந்தித்தது.
அதற்கடுத்து இசையமைப்பாளர் அனிருத், நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா இருவரது முத்தப் புகைப்படம் வெளியாகி மற்றுமொரு பரபரப்பை ஏற்படுத்தியது. அனிருத்தை விட ஆண்ட்ரியா மூத்தவர் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்தக் காதலும் அப்படியே காணாமல் போய்விட்டது.
இப்போது துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் காதல் பிரிவுதான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரது முத்தப் புகைப்படமும் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதுதான் இவர்கள் இருவருமே காதலிக்கிறார்கள் என்ற செய்தி வெளியில் வந்தது.
இப்படி முத்தப் புகைப்படங்கள் வெளிவந்த காதல் ஜோடிகளது காதல் முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்த்தால் அது சத்தமில்லாமல் பிரிவில் போய் முடிந்திருக்கிறது.