பிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் தேசிய விருது பெற்ற 3 சிவாஜி படங்கள்
ADDED : 16 hours ago
நடிகர் திலகம் சிவாஜி என்னதான் உருகி உருகி நடித்தாலும், அரசியல் காரணங்களால் அவருக்கு உரிய தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பல சர்வதேச விருதுகளை அவர் பெற்றிருந்தாலும் இந்திய விருதுகள் அவரை புறக்கணித்தே வந்திருக்கிறது. அவரை புறக்கணித்தாலும் அவரது படங்களை புறக்கணிக்க முடியவில்லை.
1961ம் ஆண்டு தேசிய விருதுக்காக சென்ற 4 படங்களுமே சிவாஜி நடித்த படங்கள்தான். பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், கப்பலோட்டிய தமிழன் ஆகிய படங்கள் தேசிய விருதுக்கு சென்றது. இதில் 'பாவமன்னிப்பு' அகில இந்திய அளவில் 2வது சிறந்த படமாக விருது பெற்றது, 'கப்லோட்டிய தமிழன்' படம் தமிழில் சிறந்த படமாகவும், 'பாசமலர்' இரண்டாவது சிறந்த படமாகவும் தேர்வானது. 'பாலும் பழமும்' மட்டும் விருது எதையும் பெறவில்லை. அது மாநில அரசின் விருதை பின்னர் பெற்றது.