வாசகர்கள் கருத்துகள் (1)
ஒன்று இருக்கு
கருப்பு படத்தில் தான் கஷ்டப்பட்டு நடித்த காட்சிகள் வரவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் பொங்கியுள்ளார். சூர்யா மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். சென்னையில் நடந்த ஆல்பாஸ் படவிழாவில் அவர் பேசியது...
நான் கருப்பு படத்தில் க்ளைமாக்ஸில் டான்ஸ் ஆடினேன் ஆனால் அதை அப்படியே தூக்கி விட்டார்கள், என்ன அநியாயம் இது. நீக்கப்பட்ட காட்சிகளை யுடுயூப்பில் வெளியிடுவோம் என்றார்கள். அதையும் செய்யவில்லை, சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள். நான் பல வருடங்களாக நடிகராக, தயாரிப்பாளராக இருக்கிறேன். எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும். நீங்களே பாருங்கள். உடனே வாட்ஸ்அப், மீடியா என்று எதை எதையோ வைத்துக் கொண்டு எங்களைப் பற்றி தப்பாக எழுதுகிறார்கள். எங்களுக்கு வேலை கொடுக்கிறார்களோ இல்லையோ, என்ன வீடியோ போட்டாலும், 'உன் பையன் அதை அடிக்கிறான், பைத்தியக்காரன்' என்று என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் என்ன நல்ல வேலை செய்தேன் என்று நினைத்தாலும், கீழே போய் அதை கொச்சைப்படுத்தி பேசிக் கொண்டிருப்பார்கள். இப்படி சனியன்கள் நாட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதுதான் வேலை. எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் மரியாதை செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது. சினிமாவில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும், விளம்பர மீடியா உள்ளிட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். அழைப்பிதழில் படத்தில் வேலை செய்யும் டெக்னீஷியன்கள் பெயரை பெரிதாக போட வேண்டும். யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிடக்கூடாது'' என்றார்.
ஒன்று இருக்கு