இப்படியும் ஒரு கூத்து : ரிலீஸிற்கு முன்பே ஓடிடியில் தவறாக வெளியான ஹாலிவுட் படம்
பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ ஜேசன் ஸ்டேதம். பாஸ்ட் அண்ட் பியூரியஸ், எக்ஸ்பெண்டபள் படத் தொடர்கள் மூலம் புகழ்பெற்றவர். அடிப்படையில் சண்டை கலைஞரான இவர் ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கிறவர். இவருக்கென்று உலகம் முழுக்க தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் நடிப்பில் இன்று (21ம் தேதி) வெளியாக உள்ள படம் 'மியூனிடி'.
இந்த நிலையில் நேற்றே இந்த படம் அமேசான் ப்ரைம் தளத்தில் அமெரிக்க நாடுகளில் தவறுதலாக வெளியாகி விட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படத்தின் தயாரிப்பு தரப்பு அமேசான் தரப்பை தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
தயாரிப்பு நிறுவனத்துடன் அமேசான் நிறுவனம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி படம் வெளியீட்டு (அப்லோட் ப்ளே லிஸ்ட்) வரிசையில் இணைக்கப்பட்டதாகவும், அதன்படி படம் தானாவே வெளியாகி விட்டதாக கூறப்படுகிறது. படம் குறிப்பிட்ட தேதியில் தியேட்டரில் வெளியாகாமல் தாதமதமான வெளியானதும், அதுகுறித்த தகவலை தயாரிப்பு தரப்பு அமேசானிடம் தெரிவிக்காததுமே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.