உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்சிக் : கட்டண உயர்வு கொடுத்த தெலங்கானா, ஆந்திர அரசுகள்

டாக்சிக் : கட்டண உயர்வு கொடுத்த தெலங்கானா, ஆந்திர அரசுகள்

தமிழக அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதியாக உள்ள வெங்கட் நாராயணா, நடிகர் யஷ் உடன் இணைந்து தயாரித்துள்ள 'டாக்சிக்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கான டிக்கெட் கட்டண உயர்வை தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. டப்பிங் படங்களுக்கும் தெலங்கானா அரசு டிக்கெட் கட்டண உயர்வை அறிவித்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் 50 ரூபாய், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் 100 ரூபாய் உயர்த்திக் கொள்ளலாம். பத்து நாட்களுக்கு இந்த டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் நடத்திக் கொள்ளலாம். நாளை காலை 6 மணிக்கு சிறப்புக் காட்சிக்கும் அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான கட்டணமாக 600 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசின் ஆணைப்படி, தெலுங்குத் திரையுலக பணியாளர்கள் நல கமிட்டிக்கு 'டாக்சிக்' தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளன.

தெலங்கானா அரசு போலவே ஆந்திர அரசும் சற்று முன்பு டிக்கெட் கட்டண உயர்வுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இதனால், ஆந்திரா, தெலங்கானாவில் முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !