உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குறைவான படங்களில் நடிப்பது ஏன்? : அதிதி விளக்கம்

குறைவான படங்களில் நடிப்பது ஏன்? : அதிதி விளக்கம்

இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி 2022ம் ஆண்டு 'விருமன்' படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவிற்கு வந்த நான்கு ஆண்டுகளில் மாவீரன், நேசிப்பாயா, பைரவம்(தெலுங்கு), சமீபத்தில் வெளிந்த 'ஒன்ஸ்மோர்' என 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

தற்போது 'ஒன்ஸ்மோர்' படத்தில் அதிதியின் நடிப்பு பரவலான பாராட்டை பெற்று வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார். என்றாலும் வருடத்திற்கு ஒரு படம் என்கிற வகையில் குறைவான படங்களில் நடிப்பது ஏன் என்பது பற்றி அவர் கூறியிருப்பதாவது :

எனக்கு எண்ணிக்கை பெரிதாகத் தோன்றவில்லை. வெளியாகிற ஒவ்வொரு படத்திலும் என்னுடைய கேரக்டர் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும்தான் அதிகமாக யோசிக்கிறேன். அதனால், பதற்றமில்லாமல், அவசரமில்லாமல் நடிக்கிறேன். படங்கள் நல்லபடியாகத் தேர்வாவது என்னுடைய உள்ளுணர்வு காரணமாக இருக்கலாம்.

நம்மை ஒரு கேரக்டரில் ஒட்டிக்கொள்ள அந்த ஸ்கிரிப்ட் இடம் தருகிறதா என்பதை மட்டும்தான் பார்ப்பேன். அதனால் நிதானமாக நல்ல படத்தில் மட்டும் நடித்தால் நல்லது என்று நினைக்கிறேன். குடும்பத்தினர் உட்கார்ந்து பொதுவான சினிமா அதன் போக்கு பற்றி பேசுவோம். அவரவர் தனிப்பட்ட ப்ராஜக்ட்களில் மற்றவர்கள் தலையிடுவதில்லை என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !