உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 கோடி வசூலித்த 'டிசி' முதல் மாதவன் கலக்கிய 'ஜிடிஎன் வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்...!

100 கோடி வசூலித்த 'டிசி' முதல் மாதவன் கலக்கிய 'ஜிடிஎன் வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்...!


ஆனந்தன் காடு

இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஆனந்தன் காடு'. இந்த திரைப்படம் நேற்று முன்தினம் (செப்.2ம் தேதி) அமேசான் ப்ரைம், மனோரமா மேக்ஸில் வெளியாகியுள்ளது.

டிசி

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிசி'. தனது முதல் படத்திலேயே 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளார். இந்த திரைப்படம் நாளை (செப்.4ம் தேதி) சன் நெக்ஸ்ட்டில் வெளியாகவுள்ளது.

ஜிடிஎன்

கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் நடிகர் மாதவன், துஷாரா விஜயன், சத்யராஜ், ஜெயராம், தம்பி ராமையா, அதிதி பாலன், பிரிகிடா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஜிடிஎன்'. இது புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாகும். இந்த படம் நாளை (செப்.4ம் தேதி) நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

கொரியன் கனகராஜூ

தெலுங்கு இயக்குநர் மெர்லபாகா காந்தி இயக்கத்தில் நானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'கொரியன் கனகராஜூ'. ஹாரர் படமான இந்த திரைப்படம் நாளை (செப்.4ம் தேதி) நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

உன்மதம்( Unmadham)

மலையாள இயக்குநர் குஞ்சாக்கோ போபன் நடித்த திரைப்படம் ' உன்மதம்'. இதில் லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இந்த படம் நாளை(செப்.4ம் தேதி) சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது.


வீரபத்ருனி ரகசியம் (Veerabhadruni Rahasyam)

தெலுங்கு இயக்குநர் பீமகனி ஸ்ரீ வர்தன் ரெட்டி இயக்கத்தில், அன்னி, ரகு குஞ்சே உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள வெப் தொடர் ' வீரபத்ருனி ரகசியம் (Veerabhadruni Rahasyam)'. இந்த தொடர் நாளை(செப்.4ம் தேதி) ஜீ5யில் வெளியாகவுள்ளது.

ஜெகமே சங்கீதம் (Jagamae Sangeetham)

இயக்குநர் பல்நட்டி சூர்யா பிரதாப் இயக்கத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ், மேகா ஸ்ரீகாந்த், மதுபாலா, அக்சய் லகுசானி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த வெப் தொடர் 'ஜெகமே சங்கீதம் (Jagamae Sangeetham)'. இந்த தொடர் அமேசான் ப்ரைமில் நாளை (செப்.4ம் தேதி) வெளியாகவுள்ளது.

தி கோர்ட் (The Court)

இயக்குநர் பாலா எஸ்.பி இயக்கத்தில் வெளிவந்த வெப் தொடர் ' தி கோர்ட் (The Court)'. இந்த தொடரில் யோகலட்சுமி (யாழினியாக), வி. ஜெயபிரகாஷ் (ராஜ் சேகராக), மற்றும் அர்ஜுன் சியாம் கோபன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த தொடர் நாளை (செப்.4ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

வதாலா (Vadhala)

தெலுங்கு இயக்குநர் வம்சி கிருஷ்ணா அகெல்லா இயக்கத்தில், நடிகைகள் ஹிருத்திகா ஸ்ரீனிவாஸ்,லயா கோர்ட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' வதாலா (Vadhala)'. இந்த திரைப்படம் நேற்று (செப்.3ம் தேதி) நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !