உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லாலின் 'அதிமனோகரம்' படப்பிடிப்பு நிறைவு

மோகன்லாலின் 'அதிமனோகரம்' படப்பிடிப்பு நிறைவு

மலையாளத்தில் கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'தொடரும்'. இதை தொடர்ந்து மீண்டும் அதன் இயக்குனர் தருண் மூர்த்தியின் டைரக்சனில் 'அதிமனோகரம்' என்கிற படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார். இந்த படத்தில் சபரிமலை சன்னிதானத்தில் பணி செய்யும் லவ்லாஜன் என்கிற போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.

கிட்டத்தட்ட 115 நாட்கள் இதன் படப்பிடிப்பு தொடுபுழா, கொச்சி, சபரிமலை, ஹைதராபாத் மற்றும் மும்பை என பல்வேறு முக்கிய பகுதிகளில் வெவ்வேறு கட்டமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடுக்கிவிட்டு, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக இதை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !