புதிதாக கபே தொடங்கிய நண்பருக்கு சல்மான் கான் எச்சரிக்கை
நடிகர் சல்மான் கானின் நண்பர் ஒருவர் மும்பை பாந்த்ரா பகுதியில் புதிதாக தி டக் ஷாப் அட் சேவியர்ஸ்' என்கிற கபே ஒன்றை துவங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதனை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்த சல்மான் கான், நண்பருக்கு வாழ்த்துக்களை சொன்னதுடன் நகைச்சுவையாக சில எச்சரிக்கைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு மீண்டும் ஒரு கப் காபி ரீபில் செய்து கொடுங்கள்.. விலையை உயர்த்தாதீர்கள்.. தரத்தை எப்போதும் பராமரியுங்கள்.. சுகாதாரமான முறையை பின்பற்றுங்கள்... இல்லை என்றால் நான் 'அவரை' அனுப்பி வைப்பேன்; விஷயம் முடிந்தது, அவ்வளவுதான் என்று ஜாலியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'அவரை' என்று சல்மான் கான் குறிப்பிட்டது, சமீப காலமாக மும்பை உணவுத்துறை கட்டுப்பாட்டு ஆணையராக பணியாற்றி வரும் 'துக்காராம் முண்டே' என்பவர் குறித்துதான். விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் கபே மற்றும் உணவுக்கூடங்கள் மீது தீவிரமான சோதனை நடத்தி அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு பெயர்பெற்றவர்தான் இந்த துக்காராம் முண்டே. கபேவை சரியாக நடத்தவில்லை என்றால் இவரைத்தான் அனுப்பி வைப்பேன் என்று நண்பரை ஜாலியாக கலாட்டா செய்துள்ளார் சல்மான் கான்.