உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்தார் 2 படத்துக்காக துாங்காமல் பணியாற்றி இருக்காங்க : கார்த்தி

சர்தார் 2 படத்துக்காக துாங்காமல் பணியாற்றி இருக்காங்க : கார்த்தி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா நடித்த ‛சர்தார் 2' நாளை மறுநாள் (செப்., 10) ரிலீஸ் ஆகிறது. இதில் நாசர், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிமா என பலர் பணியாற்றியிருக்கிறார்கள். படம் குறித்து சென்னையில் கார்த்தி கூறியது...

''ஒவ்வொரு படத்தில் இருந்தும் நிறைய கற்றுக் கொள்கிறேன். ஒரு படத்தை உருவாக்கி பலரின் உழைப்பு தேவைப்படுகிறது. சர்தார் 2வில் முந்தைய சர்தார் படத்தின் முந்தைய கதை, பிந்தைய கதையை சொல்லியிருக்கிறோம். முதற்பாகத்தில் தண்ணீர், தண்ணீர் பாட்டில் விஷயம் விழிப்புணர்வாக பேசப்பட்டது. இந்த படத்திலும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. படத்தை எடுத்து முடித்தபின் ஒரு ஆண்டுகள் எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணியில் ஈடுபட்டார் இயக்குனர் மித்ரன்.

கைதி படத்துக்கு பின் இதில் சாம்.சிஎஸ் உடன் இருந்து இருக்கிறேன். அவர் இசையில் வரும் 100வது படம் இது என்பது மகிழ்ச்சி. ஆர்ட் டை க்டர் ராஜீவன் அந்த கால விஷயங்களை படத்தில் கொண்டு வந்து இருக்கிறார். இந்த படத்துக்காக பலர் இரவு, பகலாக, கொஞ்ச நேரம் மட்டுமே துாங்கி வேலை செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கும், அதை பொறுத்துக் கொண்டு, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !