'வாத்தியார்' தந்த சறுக்கலைக் சரி செய்வாரா 'சர்தார் 2'
2026ம் ஆண்டில் கடந்த வாரம் வரையிலும் 150 படங்கள் வரை வெளியாகிவிட்டன. இந்த வருடத்தில் வெளியான இத்தனை படங்களில் சில முன்னணி நடிகர்களின் படங்களும் தோல்வியைத் தழுவின. அதில் சிலரது படங்கள் சாதாரண தோல்வி அல்ல படுதோல்வியாக அமைந்து அதிர்ச்சியைத் தந்தன.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பொங்கலை முன்னிட்டு கார்த்தி நடித்த 'வா வாத்தியார்' படம் வெளிவந்தது. படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஓரிரு நாட்கள் மட்டுமே தியேட்டர்களில் இருந்தது. அப்படி ஒரு தோல்வியை கார்த்திக்கு அதற்கு முன்பு பார்த்ததில்லை என்பதுதான் உண்மை.
கார்த்தியின் அடுத்த படமாக நாளை மறுதினம் செப்டம்பர் 10ம் தேதி 'சர்தார் 2' படம் வெளியாக உள்ளது. பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
2022ல் வெளியான இப்படத்தின் முதல் பாகமான 'சர்தார்' படம் 100 கோடி வசூலைப் பெற்ற ஒரு படம். அதனால், 'சர்தார் 2' படமும் முதல் பாகத்தை விடவும் நல்லதொரு வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.
'வாத்தியார்' தந்த தோல்வியை 'சர்தார்' காப்பாற்றிக் கொடுத்தால் கார்த்தியின் சறுக்கல் சரியாகும்.