'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்!
பிரபாஸின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான 'பௌசி', நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வருகிறது. ஹனு ராகவபுடி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தை இயக்கி வருகிறார். 2024ம் ஆண்டு ஆகஸ்ட் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட இப்படத்தின் வெளியீட்டுத் தேதியாக 2026 டிசம்பர் 3ம் தேதியைத் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் உறுதிப்படுத்தினர்.
இருப்பினும், அந்த தேதியில் இருந்தும் இப்படம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் தற்போது தெலுங்கில் நாக சைதன்யா நடித்துள்ள 'விருஷகர்மா' படத்தை டிசம்பர் 3ம் தேதியையும், துல்கர் சல்மானின் 'ஸ்ரீ ஸ்ரீ' என்ற படத்தை டிசம்பர் 4ம் தேதியையும் வெளியிட அப்பட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
என்றாலும், பிரபாஸின் 'பௌசி' படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடமிருந்து பௌசி ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை. அந்நிறுவனம் முறையான அறிவிப்புகளை வெளியிட்ட பிறகே இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதிகள் உறுதிப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.