உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ்

சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ்


மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தற்போது சூர்யா, தனது 47வது படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நஸ்ரியா நடிக்கிறார். இதனை ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் சூர்யாவே தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்துக்கு சீன் என தலைப்பிட்டு அதற்கான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சூர்யா, சீனிவாசன் என்ற கேரக்டரில் நடிப்பதாகவும் அதன் சுருக்கமே சீன் எனக் கூறப்படுகிறது. சுசின் ஷியாம் இசை அமைத்துள்ளார். திராவிட் செல்வம் வசனம் எழுதியுள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ல் ரிலீசாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !