உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்தார் 2, மண்டாடி படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

சர்தார் 2, மண்டாடி படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில், மீண்டும் அவர்கள் கூட்டணியில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் சர்தார் 2. இப்படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இப்படம், உலக அளவில் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்து நேற்று திரைக்கு வந்துள்ள படம் மண்டாடி. இப்படத்தில் அவருடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படகுப் போட்டியை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ள இப்படமும், நேற்று முதல் நாளில் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !