உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மனைவியை விவாகரத்து செய்த ஸ்ரீநாத் பாஸி

மனைவியை விவாகரத்து செய்த ஸ்ரீநாத் பாஸி


மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஸி. 'மஞ்சும்மேல் பாய்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவார், போதை மருந்து உபயோகம். பாலியல் தொல்லை, தயாரிப்பாளர்களுடன் கால்ஷீட் பிரச்னை என்று அடிக்கடி லைம் லைட்டுக்கு வருவார்.

இந்த நிலையில் அவர் தனது மனைவியை பிரிந்து வாழ்வதாக அறிவித்துள்ளார். ஸ்ரீநாத் திருவனந்தபுரத்தை சேர்ந்த ரீத்து தக்காரி என்பவரை 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீநாத் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றியபோது அவருடன் பணியாற்றிவர் ரீத்து அவரையே காதலித்து திருமணம் செய்தார்.

10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள் தற்போது விவாகரத்து செய்துள்ளனர். இதனை அவர்களே அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள பதிவில் “விவாகரத்துக்குப் பிறகு, நான் இப்போது என் பெற்றோருடன் தங்கியிருக்கிறேன். எனது மனைவியைப் பிரிந்து விட்டேன். விவாகரத்தானதை கூட ரகசியமாக வைத்திருந்தேன். இப்போது அதை சொல்ல வேண்டிய தருணம் வந்து விட்டதால் இதுகுறித்து இப்போது தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !