/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கிளாம்பாக்கம் காவல் நிலையம் செயல்பாட்டிற்கு வந்தது
/
கிளாம்பாக்கம் காவல் நிலையம் செயல்பாட்டிற்கு வந்தது
கிளாம்பாக்கம் காவல் நிலையம் செயல்பாட்டிற்கு வந்தது
கிளாம்பாக்கம் காவல் நிலையம் செயல்பாட்டிற்கு வந்தது
PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

கிளாம்பாக்கம், :கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள காவல் நிலைய புதிய கட்டடம், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வளாகம் உள்ளே, 18.26 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட காவல் நிலைய புதிய கட்டடம், கடந்த மாதம் 5ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது.
ஆனால், திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும், காவல் நிலைய புதிய கட்டடத்தில், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட காவல் நிலையங்கள் செயல்படாமல், பழைய கட்டடங்களிலேயே செயல்பட்டு வந்தன.
நவீன வசதிகளுடன், மூன்று தளங்களுடன், ஐந்து காவல் பிரிவுகளை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலைய புதிய கட்டடத்தை, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, நம் நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, கிளாம்பாக்கம் காவல் நிலைய புதிய கட்டடத்தில், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு ஆகிய காவல் நிலையங்கள், செயல்படத் துவங்கின.
விரைவில் போக்குவரத்து, அனைத்து மகளிர், போக்குவரத்து புலனாய்வு ஆகிய காவல் நிலையங்களும் இதே கட்டடத்தில் இயங்கத் துவங்கும் என, போலீசார் கூறியுள்ளனர்.