/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பந்தலுார் நீர்மட்டம் பகுதியில் சேதமடைந்த சாலையில் சீரமைப்பு பணி; 'தினமலர்' செய்தி எதிரொலி

PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM

பந்தலுார்; பந்தலுார் அருகே நீர்மட்டம் பகுதியில் சேதமான சாலை பகுதி, தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
பந்தலுாரில் இருந்து ஊட்டி, கேரளா மலப்புரம், வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், செல்லும் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நீர்மட்டம் என்ற இடத்தில், சாலையோரம் மண்ணரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.
கடந்த ஆண்டு மழையின் போதே சேதமான சாலை பகுதியை சீரமைக்காமல் விடப்பட்ட நிலையில், மீண்டும் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை கண்டு கொள்ளாத நிலையில், 'தினமலர்' நாளிதழில் கடந்த, 9-ம்தேதி செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை கொண்டு, மண் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இங்கு வாகன விபத்தை தடுக்கும் வகையில், நிரந்தர தடுப்பு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.