/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பார்க்க ரொம்ப 'சிம்பிள்' வாங்கியதோ 'லாம்போகினி'
/
பார்க்க ரொம்ப 'சிம்பிள்' வாங்கியதோ 'லாம்போகினி'
ADDED : ஜூன் 29, 2025 02:00 AM

பெங்களூரு: கர்நாடகாவில் எந்தவித ஆடம்பரமும் இன்றி கார் விற்பனையகத்தின் உள்ளே சென்ற தந்தை - மகன், 4.61 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'லாம்போகினி' சொகுசு காரை வாங்கிச் சென்ற புகைப்படம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த தந்தை - மகன், மிகவும் சாதாரண உடையுடன் எளிமையாக, ஒரு கார் ஷோரூமிற்குள் சமீபத்தில் நுழைந்தனர்.
அங்கிருந்த கார்களை வரிசையாக பார்த்தபடி வந்த அவர்கள், சில நிமிடங்களிலேயே, 4.61 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'லாம்போகினி ஸ்டெரட்டோ' காரை வாங்கினர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஷோரூம் ஊழியர்கள் திகைத்தனர். அந்த காரை அவர்கள் பெற்றுக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. காரை வாங்கியவர் யார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
கடந்த, 2022ல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட, 'லாம்போகினி ஸ்டெரட்டோ' வகை கார், 2023ன் பிற்பகுதியிலேயே சந்தையில் விற்பனைக்கு வந்தது. இதுவரை, 1,499 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்திய சந்தைக்கு, 15 கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.