/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆங்கிலேயர்; பதிவு செய்த மைல்கல் கண்டுபிடித்து பராமரிப்பு
/
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆங்கிலேயர்; பதிவு செய்த மைல்கல் கண்டுபிடித்து பராமரிப்பு
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆங்கிலேயர்; பதிவு செய்த மைல்கல் கண்டுபிடித்து பராமரிப்பு
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆங்கிலேயர்; பதிவு செய்த மைல்கல் கண்டுபிடித்து பராமரிப்பு
ADDED : ஜூன் 29, 2025 10:51 PM

குன்னுார்; குன்னுாரில் தமிழுக்கு பாரம்பரிய பறைசாற்றாக உள்ள, 200 ஆண்டு பழமையான, ஆங்கிலேயரின் 'மைல் கல்' கல்வெட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குன்னுாரில், 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பழைய மேட்டுப்பாளையம் சாலையாக கன்னிமாரியம்மன் கோவில் பாதை இருந்துள்ளது. அப்போது வனப்பகுதி சாலை வழியாக நீலகிரிக்கு மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் வந்தனர்.
இதில், 1833ம் ஆண்டில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு, பர்லியார், கே.என்.ஆர்., காட்டேரி, கன்னிமாரியம்மன் கோவில் தெரு வழியாக, குன்னுார், ஊட்டிக்கு வருவதை வழக்கமாக கொண்டனர்.
1872க்கு பிறகே காட்டேரி, காந்திபுரம் வழியாக அமைக்கப்பட்ட, 2வது மேட்டுப்பாளையம் சாலை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதன்பிறகு நந்தகோபால பாலம், நஞ்சப்பா சத்திரம் பகுதிகளில் பராமரிப்பின்றி விடப்பட்டதால், கன்னிமாரியம்மன் தெரு சாலை பயன்படுத்தாமல் விடப்பட்டது. அதில், ஆங்கிலேயர் காலத்தில், அமைக்கப்பட்ட, ஒன்றாவது மைல்கல் விபரம் செதுக்கிய பாறை ஒன்று, குன்னுார் கன்னிமாரியம்மன் கோவில் சாலையில் உள்ளது.
மாவட்ட கலெக்டர் ஆய்வு
இந்நிலையில், சமீபத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா இப்பகுதியை ஆய்வு மேற்கொண்டார். இதன் சிறப்பு குறித்து, கிளீன் குன்னூர் அமைப்பு நிர்வாகிகள் சமந்தா அயனா, வசந்தன் ஆகியோர் தெரிவித்தனர்.
நீலகிரியில் ஆங்கிலேயர்களால் பதிவு செய்த இந்த பாறை மைல்கல், புற்கள் சூழ்ந்து காணப்பட்டதை பராமரிக்கவும், தமிழுக்கும் பாரம்பரிய பறைசாற்றாக உள்ளதுடன், 200 ஆண்டு பழமையான ஆங்கிலேய கல்வெட்டை பாதுகாக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
டாக்டர் வசந்தன் கூறுகையில், ''இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, பாம்பே ராணுவ கேப்டன் ஸ்டீபன் பொன்சன்பி பீகாக் என்பவர் இயற்கை ஓவியங்களை வரைய நீலகிரி வந்துள்ளார். அவர், 1847ல் வரைந்த ஓவியத்தில், இந்த மைல்கல் இடம் பெற்றுள்ளது.
இந்த இடத்தில் இருந்து, 'டிராவலர் பங்களா ' எனப்படும், (தற்போதைய ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்) தங்கும் விடுதிக்கு வந்து தங்கி ஊட்டிக்கு ஓட்டுப்பட்டறை வழியாக ஆங்கிலேயர் சென்றுள்ளனர்.
இதற்காக, 1வது மைல், 2வது மைல் என பாறைகளில் செதுக்கி எழுதப்பட்டுள்ளது. இதில், பழைய மேட்டுப்பாளையம் சாலையான, கன்னிமாரியம்மன் கோவில் சாலையில், 1வது மைல்கல் குறித்து செதுக்கிய பாறை ஒன்று மட்டுமே காணப்படுகிறது.
இந்த மைல்கல்லில் தமிழிலும் 'க' என்ற வார்த்தையும் பதியப்பட்டுள்ளது,'' என்றார்.