sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

பல்லக்கு துாக்கும் ரசிகர்கள்!

/

பல்லக்கு துாக்கும் ரசிகர்கள்!

பல்லக்கு துாக்கும் ரசிகர்கள்!

பல்லக்கு துாக்கும் ரசிகர்கள்!

1


PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல். விஜயராகவமன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது தான் வைத்தார்... அவரது ரசிகர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை. தமிழக சேனல்களோ, அவர் கட்சி அலுவலகத்துக்கு விஜயம் செய்வதைக் கூட, பிறவி புண்ணியம் போல், போட்டி போட்டு காட்டுகின்றன.

இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் தான் இத்தகைய கூத்துகள் எல்லாம் நடக்கும்!

நம் அண்டை நாடான சீனாவில் தேர்தலும் இல்லை; எதிர்க்கட்சிகளும் இல்லை.

அதை அடக்குமுறை என்று கூறினாலும், அங்கு உழைக்காமல் வாழுகிறவர் என, ஒருவரைக் கூட பார்க்க முடியாது. அத்துடன், ஜனநாயகப் போர்வையில், அரசின் நலத் திட்டங்களை தகர்க்க முற்படுவதும், தனக்கும், தன் குடும்பத்துக்கும், 20 தலைமுறைக்கு சொத்து சேர்க்க அரசியலை பயன்படுத்துவதும் இல்லை.

உலகை என்றாவது ஓர் நாள் ஆள வேண்டும் என்ற கனவுடன், துாங்காமல் வேலை செய்யும் சீனா, தங்களது, 'டீப் சீக்' செயற்கை நுண்ணறிவு செயலி வாயிலாக, உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை எல்லாம் நிலை குலைய வைத்துள்ளது.

டிரோன்களின் கட்டுமானத்திலும், பயன்பாட்டிலும், 20 ஆண்டுகள் முன்நோக்கி நடை போடுகிறது. 'கிழக்கே ஓர் அரக்கன் தன்னை அறியாமல் உறக்கத்தில் இருக்கிறான்; மொழியால், இனத்தால், உழைப்பால் கடுமையானவன். அவன் எழுந்தால் உலகம் தாங்காது' என்று என்றோ நெப்போலியன் கூறியது, இன்று உண்மையாகி விட்டது.

இந்தியா பல துறைகளில் சீனாவுக்கு போட்டியாக சவால் விட்டு முன்னேறினாலும், உழைப்பில் இன்னும் தீவிரம் காணப்படவில்லை. காரணம், இங்கு மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், பிரிவினைவாத அரசியல்வாதிகள் ஒருபுறம் என்றால், உழைக்கும் திறன் கொண்ட இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்...

நடிகர்களுக்கு, 'கட் - அவுட்' வைத்து, பாலாபிேஷகம் செய்வதும், அவர்கள் அரசியலுக்கு வந்தால், போஸ்டர் அடித்து ஒட்டுவதும் தான் இவர்களது பிரதான வேலை. எப்படி நாடு வல்லரசு ஆகும்?

உழைக்கும் திறன் கொண்ட இளைஞர்கள், இப்படி நடிகர்கள் சம்பாதிக்கவும், பதவி சுகத்தை அனுபவிக்கவும், தங்கள் நேரத்தையும், பணத்தையும், உழைப்பையும் செலவழித்து, தங்களுக்கான விடியலை கனவு காணுகின்றனர். ஆனால், அது பலரின் வாழ்வில் பகல் கனவாகவே போய் விடுவதை அறிவதில்லை!

எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்; அவர்களுக்குப் பின் சென்ற ரசிகர்களின் நிலை என்னவானது?

பொருளை எல்லாம் இழந்து, இளமையையும் தொலைத்து, இச்சமூகத்துக்கு சுமையாகிப் போன பின், தன்னிலைக்கு வருகின்றனர். அதனால், இந்த நாட்டுக்கும், அவர்களுக்கும் என்ன பயன்?

தங்கள் லட்சியம் அரசியல் என்றால், இளைஞர்கள் அதை தேர்ந்தெடுக்கலாம்; ஆனால், தான் திரைப்படத்தில் பார்த்து ரசித்த ஒரு நடிகன் பல்லக்கில் ஏறுவதற்காக, தன் முதுகை கழுதையாக்கிக் கொண்டால், இந்த நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல; வீட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

இதை இளைஞர்கள் என்று உணருகின்றனரோ அன்று, சீனாவைப் போன்று இந்தியாவும் வல்லரசு நாடாகும்!

  

நோட்டை பார்த்தால் ஆட்டைய போடு!


டி.ஆர். நாராயணசாமி, பெங்களூரில் இருந்து எழுதுகிறார்: தமிழக அரசு, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பெற்ற கல்விக் கடன், 49 கோடியை அடியோடு ரத்து செய்துள்ளது. காரணம், நிலுவைத் தொகையை வசூலிக்க இயலவில்லையாம்!

மாணவர்கள் பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்கள் அலுவலகங்களில் இல்லாததால், வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலவில்லை என புது கரடி விட்டுள்ளனர். அது சரி... கடன் தரும்போது அடையாளம் தெரியாமல், வருகிறவர், போகிறவர்களுக்கு எல்லாம் தந்தனரா அல்லது கடனை எஸ்.,சி - எஸ்.டி., மாணவர்கள் பெற்றதாக கணக்கு காட்டி, கப்பம் செலுத்த வேண்டியவர்களுக்கு செலுத்தி, மீதியை, 'லபக்'கினரா?

மற்ற பிரிவுகளை சேர்ந்த மாணவர்களின் முழு விபரம் உள்ளபோது, இவர்களது ஆவணங்கள் மட்டும் எப்படி இல்லாமல் போகும்? அப்படியென்றால் இது யார் குற்றம்? ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினரா அல்லது அழிக்க எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களிடம், 100க்கு 10 ரூபாய் என வசூலிக்கப்பட்டதா?

இது போல் எஸ்.சி., - எஸ்.டி.,யினர் பெற்ற தொழிற்கடனும் ஆவணங் களை தவறவிட்டால், கடன் தள்ளுபடி செய்யப்படுமா?

ஓட்டு நாள் வரும்; துட்டு தள்ளுபடி நாளும் வரும் என, அவர்கள் நம்பிக்கையோடு உள்ளனரே!

அது சரி... நோட்டைப் பார்த்தால், ஆட்டையப் போட தி.மு.க.,வினருக்கு சொல்லியா தர வேண்டும்?

கருணாநிதி டாக்டர் பட்டம் பெற, உதயகுமார் என்ற காங்கிரஸ் மாணவன் தெப்பக்குளத்தில் தள்ளப்பட்டு இறந்தான். அவனது அப்பா, தன் பிள்ளையின் பிணத்தைப் பார்த்து, 'தன் மகன் இல்லை' என வாக்குமூலமே தந்தான்.

பெற்ற மகனையே பிள்ளை இல்லை என கூற வைத்த விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் வித்தகர்கள் ஆயிற்றே!

கல்வி கடனை வசூலிக்க ஆவணம் இல்லை, பதிவேடு இல்லை என்பது எல்லாம் பணத்தை ஆட்டையப் போடக் கூறும் கதை என்பது தமிழக மக்களுக்கு தெரியாதா என்ன?

  

சாயம் வெளுத்து போச்சு!


என்.ஏ.நாகசுந்தரம், கன்னியா குமரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் கஞ்சா பயிரிடப்படவில்லை; வேறு மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. அவை, தமிழகத்தில் விற்பனையாக, மத்திய அரசு தான் காரணம்' என்று கூறியுள்ளார், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து நுாற்றுக்கணக்கானோர் இறந்தனரே... அதற்கு காரணம் மத்திய அரசு தானா?

தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் மத்திய பா.ஜ., அரசு தான் காரணம் என்றால், பா.ஜ., அரசின் துாண்டுலின் பேரில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை, தமிழக போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது தானே?

தமிழகத்திற்கான மதுவை தயாரிப்பது, மதுவால் இளம் விதவைகள் உருவாவது, போதையால் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்களுக்கும் காரணம், மத்திய அரசு தான் என்று சொன்னாலும் சொல்வர் போலிருக்கு சட்டத்துறை அமைச்சர்!

கோவையில் வெடி குண்டு வெடித்தபோது, சிறுபான்மையினர் ஓட்டுக்காக, அதை சிலிண்டர் வெடிப்பு என பேசிய நியாயவாதிகள் ஆயிற்றே தி.மு.க.,வினர்!

இந்த நான்கு ஆண்டுகளில், ஒவ்வொரு விஷயத்திலும் தி.மு.க.,வினர் போடும் இரட்டை வேடத்தை மக்கள் நன்றாக புரிந்து கொண்டனர். உங்கள் பொய் முகமூடி கழன்று, சாயம் வெளுத்து ரொம்ப நாளாச்சு... பிதற்றலை நிறுத்துங்கள்!

  






      Dinamalar
      Follow us