தெரு மின் விளக்குகள் தேவை
அகரக்கோட்டாலம் கிராமத்திலிருந்து சூளாங்குறிச்சி செல்லும் சாலையில் காட்டுக்கொட்டகை பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தெரு மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
தயாஸ்ரீ, அகரக்கோட்டாலம்
தொடர் மின் வெட்டால் அவதி
சூளாங்குறிச்சியில் அடிக்கடி அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
முத்து, சூளாங்குறிச்சி
விபத்து அபாயம்
சங்கராபுரம் பூட்டை சாலையில் வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமசாமி, சங்கராபுரம்
தெரு நாய்களால் தொல்லை
சங்கராபுரத்தில் தெரு நாய்கள் அதிகரித்துள்ளதால், இப்பகுதி மக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்
பாபு, சங்கராபுரம்
எதிர்திசை வாகனங்ளால் ஆபத்து
கள்ளக்குறிச்சி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வழியாக தென்கீரனுார் கிராமத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் எதிர் திசையில் அதிக வேகத்தில் செல்வதால், விபத்து அபாயம் நீடிக்கிறது.
மகேந்திரன், கள்ளக்குறிச்சி