/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பூங்காவில் விளையாடிய குழந்தையிடம் செயின் பறிப்பு
/
பூங்காவில் விளையாடிய குழந்தையிடம் செயின் பறிப்பு
PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM
சித்தாலப்பாக்கம், சித்தாலபாக்கம், தமிழக வீட்டு வசதி வாரிய காலனியை சேர்ந்தவர் பிரன்சிஸ், 65. நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள பூங்காவிற்கு, தனது மனைவி மற்றும் பேரன் டரியல் மைக்கேல், 2, உடன் சென்றிருந்தார்.
இந்நிலையில், குழந்தை மைக்கேல் சற்று துாரத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, குழந்தையின் அருகே நடந்து வந்த அடையாளம் தெரியாத நபர், திடீரென குழந்தையின் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பினார்.
சம்பவம் குறித்து, பிரான்சிஸ் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து, பூங்கா பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.