
சாக்லெட் தயாரிப்பில் பயன்படுகிறது கோகோ தாவரம். தென் அமெரிக்கா அமேசான் ஆற்றுப்படுகையை தாயகமாக உடையது. இதன் தாவரவியல் பெயர் தியோபிரமா கோகோ. ஸ்டெர்குலியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கி.மு., 2000 முதலே கோகோ தாவரம் வளர்க்கப்பட்டதாக ஆய்வுகள் வழியாக தெரியவருகிறது.
இந்த தாவரத்தை சொர்க்கத்தில் இருந்து கடவுள் கொண்டு வந்ததாக மயன் நாகரிக காலத்தில் மக்கள் நம்பினர். கடவுளின் உணவு எனவும் அழைக்கப்பட்டது. கோகோவில் கிரையல்லோ, பாரஸ்டிரோ உட்பட மூன்று ரகங்கள் உள்ளன. இவற்றில் கிரையல்லோ சிவப்பு நிற காய்களை உடையது. பாராஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்களை கொண்டது. இந்த வகை இந்தியாவில் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது.
மருந்து தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுகிறது கோகோ விதை. உலகளவில் சாக்லெட் உணவு பொருட்கள் மற்றும் சுவை மிக்க பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கோகோவில் தயாரிக்கப்படும் வெண்ணெய் சிறந்த ஆன்டி -ஆக்ஸிடன்டாக விளங்குகிறது.