/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மொழி விவகாரத்தில் பா.ஜ., அரசியல் முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு
/
மொழி விவகாரத்தில் பா.ஜ., அரசியல் முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு
மொழி விவகாரத்தில் பா.ஜ., அரசியல் முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு
மொழி விவகாரத்தில் பா.ஜ., அரசியல் முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு
ADDED : மே 28, 2025 10:56 PM
பெங்களூரு: 'கன்னட பள்ளிகளை புறக்கணித்து, உருது பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்குவதாக பா.ஜ., குற்றம்சாட்டுவது உண்மைக்கு புறம்பானது. மாநிலத்தில் வகுப்புவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை:
கர்நாடக மாநிலத்தில் 2025 - 26ம் ஆண்டு, துவக்கம், உயர்நிலை கல்வி துறைக்கு 34,438 கோடி ரூபாயும்; சமூக நலத்துறைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 4,150 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளி பராமரிப்பு, உள்கட்டமைப்பு பணிகளுக்காக 999.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு சிறுபான்மையினர் நல துறை சார்பில் உருது பள்ளிகளுக்காக மொழியை கற்கவும், பள்ளி உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் நியமனம், பாட புத்தகங்கள், புதிய பள்ளி கட்டடத்துக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஜாதி, மதங்களுடன் கன்னடம், உருது மொழியை இணைத்து பேசுவது, அம்மொழிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகும். எங்கள் அரசு அனைத்து மொழியையும் சமமாக பார்க்கிறது. துளு, கொங்கனி, கொடவா மொழிகளுக்கு தனி அகாடமிகள் திறக்கப்பட்டு, ஆண்டுக்கு 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கன்னடம், கலாசார துறையின் கீழ், 14 அகாடமிகள், மூன்று ஆணையங்கள், 24 அறக்கட்டளைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் கன்னடம், கன்னடர்கள், கர்நாடகாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளன. நிலம், நீர், மொழியை காப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருக்கிறேன்.
இத்தகைய சூழ்நிலையில், பா.ஜ.,வினர் அரசியல் உள்நோக்கத்துடன், கன்னட மொழிக்கு 32 கோடி ரூபாய் தான் கொடுக்கப்பட்டு உள்ளது என்று பொய் பிரசாரம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.