/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காணாமல் போன மொபைல் போன்கள் கண்டுபிடிப்பதில் கர்நாடகா 2வது இடம்
/
காணாமல் போன மொபைல் போன்கள் கண்டுபிடிப்பதில் கர்நாடகா 2வது இடம்
காணாமல் போன மொபைல் போன்கள் கண்டுபிடிப்பதில் கர்நாடகா 2வது இடம்
காணாமல் போன மொபைல் போன்கள் கண்டுபிடிப்பதில் கர்நாடகா 2வது இடம்
ADDED : மே 28, 2025 10:56 PM
பெங்களூரு: தொலைந்து போன, திருடப்பட்ட மொபைல் போன்களை கண்டுபிடித்து, உரியவர்களிடம் சேர்ப்பதில், கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இது தொடர்பாக, கர்நாடக போலீஸ் துறை வெளியிட்ட அறிக்கை:
தொலைந்து போன, திருடப்பட்ட பொது மக்களின் மொபைல் போன்களை கண்டுபிடித்து, உரியவர்களிடம் ஒப்படைத்ததில், கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது.
மொபைல் போன்களை கண்டுபிடிக்க, மத்திய தொலை தொடர்புத்துறை, 2023ல், சி.இ.ஐ.ஆர்., எனும், 'சென்ட்ரல் இக்விட்மென்ட் ஐடென்ட்டி ரிஜிஸ்ட்ரர்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் செயலி
மொபைல் போன்கள் திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ இந்த வலைதளத்தில் புகார் அளிக்க வேண்டும்.
வலை தளத்தில் அளிக்கப்பட்ட தொழில்நுட்ப தகவலின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி, மொபைல் போன்களை கண்டுபிடிக்கின்றனர்.
2016ல் துவங்கப்பட்ட இ - லாஸ்ட் மொபைல் செயலி, 2023ல் மத்திய தொலை தொடர்புத்துறை செயல்படுத்திய சி.இ.ஐ.ஆர்., செயலியில் பதிவான புகார்களின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மொபைல் போன் திருடப்பட்டது, தொலைந்து போனது தொடர்பாக, 2016 முதல் இதுவரை, கர்நாடகாவில் 3,82,692 வழக்குகள் பதிவாகின. இதில் 2.06 லட்சம் மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விஷயத்தில், நாட்டிலேயே கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது.
முதலில் புகார்
மொபைல் போன் திருடப்பட்டவுடன், இ - லாஸ்ட் மொபைல் செயலி வழியாக புகார் அளிக்க வேண்டும்.
புகார் பதிவானவுடன், நேரடியாக சி.இ.ஐ.ஆர்., வலைதளத்துக்கு தகவல் அனுப்பப்படும். சி.இ.ஐ.ஆர்., செயலியில் மொபைல் எண் மற்றும் ஐ.எம்.இ.ஐ., எண்ணை போட்டால், திருடப்பட்ட மொபைல் போன் முழுதுமாக, 'பிளாக்' ஆகிவிடும்.
யார் திருடியிருந்தாலும் மொபைல் போன் பயன்படாது. போன் உரிமையாளர்கள், தொலைந்த மொபைல் போனின் டூப்ளிகேட் எண்களை பெற்று, போலீசாரிடம் கொடுத்தால் பிளாக் செய்வர். ஒரு முறை பிளாக் செய்தால், யார் கையில் போன் கிடைத்தாலும், பயன்படுத்த முடியாது.
அந்த சிம் கார்டை வீசி விட்டு, புதிய சிம்கார்டு வாங்கி, திருட்டு மொபைல் போனில் போட்டு பயன்படுத்தினாலும், போலீசாருக்கு தகவல் செல்லும்.
திருட்டு மொபைல் போன் பயன்படாது என்பது தெரிந்தால், மொபைல் போன் திருட்டு படிப்படியாக கட்டுக்குள் வரும்.
திருடப்பட்ட மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டால், 'அன் பிளாக்' செய்து கொள்ளும் வசதி உள்ளது. www.ceir.gov.in மூலமாக அன் பிளாக் செய்யலாம்.
போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தால், அவர்களே மொபைல் போனை மீண்டும் பயன்படுத்தும்படி செய்வர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.