/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலி தங்கத்தை கொடுத்து மோசடி செய்த கும்பல் சுற்றிவளைப்பு
/
போலி தங்கத்தை கொடுத்து மோசடி செய்த கும்பல் சுற்றிவளைப்பு
போலி தங்கத்தை கொடுத்து மோசடி செய்த கும்பல் சுற்றிவளைப்பு
போலி தங்கத்தை கொடுத்து மோசடி செய்த கும்பல் சுற்றிவளைப்பு
ADDED : செப் 29, 2025 04:58 AM
ஹொஸ்கோட்: பல்லாரியை சேர்ந்தவர் சந்தோஷ்; தொழிலதிபர். ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார். கடந்த மாதம் சந்தோஷிடம், மொபைல் போனில் பேசிய சிலர், 'தங்களிடம் மன்னர்கள் காலத்து தங்க செயின்கள் உள்ளன. உங்களுக்கு குறைந்த விலையில் தருகிறோம்' என்று கூறி உள்ளனர்.
இதை நம்பிய சந்தோஷ், தன்னிடம் போனில் பேசியவர்கள் கூறியபடி, இம்மாதம் 20 ம் தேதி பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் வந்தார். ஐந்து பேர் கும்பலிடம் இருந்து தங்க செயினை வாங்கினார்.
இதற்காக 15 லட்சம் ரூபாய் கொடுத்தார். பல்லாரிக்கு சென்று, தங்க செயினை எடை பார்த்த போது அது போலி என்று தெரிந்தது.
தன்னை ஏமாற்றி மோசடி செய்த 5 பேர் மீது, ஹொஸ்கோட் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.
இந்த வழக்கில் கோலாரின் ராயல்பாடு அருகே ஹக்கிபிக்கி காலனியின் ராஜேஷ், 27, பனி, 21, சம்பத், 35, கல்யாண், 25, பிரேம்குமார், 23 ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டனர்.
இவர்களிடம் இருந்து 63 லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிலோ போலி தங்க செயின்கள், ஒரு கார், இரண்டு வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் 5 பேரும், தெலுங்கு பேசும் தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மொபைல் நம்பரை சேகரித்து, அவர்களிடம் தெலுங்கில் பேசி நம்பிக்கையை உருவாக்குவர். பின், குறைந்த விலைக்கு தங்களிடம் தங்கம் உள்ளது; மன்னர்கள் பயன்படுத்திய தங்க செயின்கள் உள்ளது என்று கூறி நம்ப வைப்பர்.
இதனை நம்பி வருவோரிடம் பணம் வாங்கி கொண்டு, போலி நகைகளை கொடுத்து அனுப்புவர். பலரிடம் இதுபோன்று மோசடி செய்தது தெரியவந்து உள்ளது.
இவர்கள் கைதாகி இருப்பதன் மூலம் ஹொஸ்கோட், நந்தகுடி, சித்லகட்டா போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 11 வழக்குகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது.

