/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு சித்துவின் பதவிக்கு ஆபத்து?
/
புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு சித்துவின் பதவிக்கு ஆபத்து?
புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு சித்துவின் பதவிக்கு ஆபத்து?
புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு சித்துவின் பதவிக்கு ஆபத்து?
ADDED : ஜூன் 13, 2025 11:07 PM

பெங்களூரு: புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பால், முதல்வர் சித்தராமையாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், 2015ம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது. கணக்கெடுப்பு நடத்த 165 கோடி ரூபாயை அரசு செலவு செய்தது. ஒன்பது ஆண்டுகள் கழித்து அந்த அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், மாநிலத்தில் அதிகம் வசிப்பதாகவும், ஒக்கலிகர், லிங்காயத் சமூகத்தினர் கணிசமாக வசிப்பதாகவும், அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இதனால் அறிக்கைக்கு ஒக்கலிகர், லிங்காயத் சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லி சென்ற சித்தராமையாவிடம், புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் உத்தரவிட்டார்.
இதனால் புதிதாக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளது. ஆனால் இதன்மூலம் சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது, அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர் என்று, சித்தராமையா தன்னை தானே கூறிக் கொள்கிறார். அவரும் பிற்படுத்தப்பட்ட, குருபா சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் அஹிந்தா சமூக ஆதரவு அவருக்கு உள்ளது.
தற்போதைய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில், அஹிந்தா சமூகத்தினர் அதிகம் உள்ளனர் என்று கூறப்படுவதால், இதையே சாக்காக வைத்து முதல்வர் பதவியில் 5 ஆண்டுகளும் நீடிக்கலாம் என்று அவர் கணக்குப் போட்டிருந்தார்.
ஆனால் புதிய கணக்கெடுப்பில் அஹிந்தா சமூகத்தினர் குறைவாக உள்ளனர் என்று கூறப்பட்டால், சித்தராமையா பதவிக்கு கண்டிப்பாக ஆபத்து ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.