/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கன்டீரவாவில் இன்று ஈட்டி எறிதல் போட்டி மைதானத்தை சுற்றி வாகனம் நிறுத்த தடை
/
கன்டீரவாவில் இன்று ஈட்டி எறிதல் போட்டி மைதானத்தை சுற்றி வாகனம் நிறுத்த தடை
கன்டீரவாவில் இன்று ஈட்டி எறிதல் போட்டி மைதானத்தை சுற்றி வாகனம் நிறுத்த தடை
கன்டீரவாவில் இன்று ஈட்டி எறிதல் போட்டி மைதானத்தை சுற்றி வாகனம் நிறுத்த தடை
ADDED : ஜூலை 05, 2025 06:25 AM
பெங்களூரு: கன்டீரவா மைதானத்தில் இன்று ஈட்டி எறிதல் போட்டி நடக்க உள்ளதை முன்னிட்டு, மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில், வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் இன்று, நீரஜ் சோப்ரா கிளாசிக் - 2025 என்ற ஈட்டி எறிதல் போட்டி நடக்கிறது.
இப்போட்டியை காண 15,000 பேர் முதல் 16,000 பேர் வரை வருவர் என்று எதிர்பார்க்கிறோம். மைதானத்தை சுற்றி போக்குவரத்து சுமூகமாக இருக்கும் வகையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மைதானத்தை சுற்றியுள்ள கே.பி.சாலை, விட்டல் மல்லையா சாலை, ஆர்.ஆர்.எம்.ஆர்., சாலை, கே.ஜி.சாலை, தேவங்கா சாலை, என்.ஆர்.சாலை, நிருபதுங்கா சாலை, சேஷாத்ரி சாலை, அம்பேத்கர் சாலையில் வாகனங்களை பார்க்கிங் செய்ய, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியை பார்க்க வருவோர், மைதானம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லுாரியில் (பாஸ் வாங்கியவர்கள் மட்டும்) வாகனங்களை நிறுத்தலாம்.
பாஸ் வாங்காதவர்கள் யு.பி.சிட்டி மால் பார்க்கிங், கிங்ஸ் வே பகுதியில் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும்.
ஹெச்.எல்.டி., சந்திப்பில் இருந்து கிரீன்ஸ் சந்திப்பு, சாந்திநகர் நோக்கி கே.பி.சாலை வழியாக செல்லும் வாகனங்கள், ஹெச்.எல்.டி., சந்திப்பு அருகே வலதுபுறம் திரும்பி ஹட்னன் சந்திப்பு, தேவங்கா சந்திப்பு, மிஷன் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
ஈட்டி எறிதல் போட்டி குறித்து, நீரஜ் சோப்ரா நேற்று அளித்த பேட்டியில், ''கன்டீரவா மைதானத்தில் நடக்கும் ஈட்டி எறிதல் போட்டியில், உலகில் தலைசிறந்த வீரர்கள் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. போட்டியின் ஒருங்கிணைப்பாளர், வீரராக உள்ளேன்.
''இது எளிதானது இல்லை. இருந்தாலும் ஒரு வீரராக போட்டியிலும் கவனம் செலுத்துகிறேன். போட்டியை நடத்த அனைத்து ஆதரவும் கொடுக்கும் கர்நாடக அரசுக்கு நன்றி,'' என்றார்.